×

விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: திருவள்ளூர் மேற்கு தேமுதிக தீர்மானம்

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருத்தணியில் நடைபெற்றது. திருத்தணி நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் வரவேற்று பேசினர். திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் ராமுவசந்தன் 14ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உத்தரவின்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள டி.கிருஷ்ணமூத்தி, மாவட்ட அவைத் தலைவர் கே.சரவணன், மாவட்ட பொருளாளர் லயன் ஆர்.சேகர், மாவட்ட துணை செயலாளார்கள் புஜ்ஜி முரளிகிருஷ்ணன், கே.தியாகராஜன். சதீஷ் (எ) சத்தியநாராயணன், பார்வதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகர், ஞானமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சசிகுமார், பா.ரஜினிகாந்த், பி.எம்.சுப்பிரமணி, வெங்கடேசுலு நாயுடு, கிருஷ்ணன் ஆகியோருக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 25ம் தேதி விஜயகாந்த் பிறந்தநாளை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும் என்று அனைத்து பகுதியிலும் சுவர்விளம்பரம் செய்து கொடி கம்பம், கல்வெட்டுகள் அமைக்கவேண்டும், புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் கண்ணன், மாவட்டஇளைஞரணி செயலாளர் பாஸ்கர்ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் மனோஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் பெருவை மு.பிரேம்குமார், கடம்பத்தூர் சுதாகர், தென்னரசு, கணபதி, கர், மணவாளன், முரளி, வெங்கடேசன், பாலாஜ, ராஜி, சுரேஷ், அரிபாபு, மாதவன், நகர செயலாளர்கள் மணிகண்டன், ராம், பேரூர் செயலாளர்கள் பாலு, பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: திருவள்ளூர் மேற்கு தேமுதிக தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : vijayakanth ,thiruvallur ,west ,Thiruthani ,Thiruvallur West District ,Consulting ,Thiruvallur West ,Dinakaran ,
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!